Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

20 February 2017

the mother

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..

"உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் .

"என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள்.

ஆனால்
இப்போதைய அம்மா என்னிடம் பொய்
சொல்வது இல்லை"

இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!

" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்
சொன்னாள்?"

அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் .....

"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா
சொல்வாள்,

எனக்கு இனிமேல் சாப்பாடு
தரமாட்டேன் என்று .

ஆனால் கொஞ்சநேரம்
கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி ,

நிலாவைக்காட்டி
கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..

ஆனால்..

இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள்

'உனக்கு சோறு
தரமாட்டேன்' என்று .

இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது".

பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
யாருமில்லை...!!

( படித்ததில் வலித்தது)

30 January 2017

Inspiring lines

✍🏽கடலில் பெய்யும் மழை பயனற்றது,
✍🏽பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
✍🏽வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍🏽நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍🏽அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
✍🏽வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.
✍🏽 பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
✍🏽 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
✍🏽பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
✍🏽 சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
✍🏽பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
✍🏽பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
✍🏽வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
✍🏽அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
✍🏽சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
✍🏽யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்
✍🏽எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
✍🏽வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
✍🏽காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
✍🏽அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
✍🏽கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹
🙌🏾இருபது ரூவா  பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா  கொடுக்குறோம்...

⌚️ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...

🙏🏻கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வரோம்...

💧காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...

👍🏻ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...

👍🏻ஜோக்கை எல்லாம் பார்வேர்ட் பண்ணுற நாம இந்த மாதிரி மெசஜை கண்டும் காணாமல்  விட்டுடுறோம்...அதில் ஒளிந்து இருக்கும் வாழ்க்கையின் சாரம் புரியாமல்